Looking for the legacy site? Click here
தாவரங்கள் பசுங்கனிகத்தின் உதவியுடன் சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றி, மாவுச்சத்துக்களான தரசத்தை (ஸ்டார்ச்) உருவாகும் தொடர் நிகழ்வுகள்.
ஒளிச்சேர்க்கை (Photosynthesis): தாவரங்கள் பசுங்கனிகத்தின் உதவியுடன் சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றி, மாவுச்சத்துக்களான தரசத்தை (ஸ்டார்ச்) உருவாகும் தொடர் நிகழ்வுகள்.
இரண்டு ஆக்ஸிஜன்மற்றும் ஒரு கார்பன் அணுக்களை கொண்டவேதிப்பொருள்.(CO2)
கரியமில வாயு (Carbon dioxide): இரண்டு ஆக்ஸிஜன்மற்றும் ஒரு கார்பன் அணுக்களை கொண்டவேதிப்பொருள்.(CO2)
ஒளிச்சேர்க்கையின் ஒரு பகுதியான இதில் கரியமில வாயு சர்க்கரையாக மாற்றப்படுகிறது.
கால்வின் சுழற்சி (Calvin cycle): ஒளிச்சேர்க்கையின் ஒரு பகுதியான இதில் கரியமில வாயு சர்க்கரையாக மாற்றப்படுகிறது.
CAM என்றும் அழைக்கப்படுகிறது. நீர் இழப்பைக் குறைக்க வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் வாழும் தாவரங்கள் பயன்படுத்தும் சிறப்பு ஒளிச்சேர்க்கை முறை.
கிராசுலேசியன் அமில வளர்சிதை மாற்றம் (Crassulacean acid metabolism): CAM என்றும் அழைக்கப்படுகிறது. நீர் இழப்பைக் குறைக்க வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையில் வாழும் தாவரங்கள் பயன்படுத்தும் சிறப்பு ஒளிச்சேர்க்கை முறை.
தாவர இலைகளில் இருக்கும் சிறிய துளைகள்.
ஸ்டோமாட்டா (Stomata): தாவர இலைகளில் இருக்கும் சிறிய துளைகள்.
Barrel cactus

கள்ளி இரவில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி சேமித்து வைக்கிறது, பின்னர் ஒளி சார்ந்த எதிர்வினைகளை முடிக்க பகல் வரை காத்திருக்கிறது. காத்திருக்கிறது.புகைப்பட உதவி DGustafson.

ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவைக்குறித்தோ அல்லது தோட்டத்தின் ஒவ்வொரு தாவரத்திற்கும் எத்தனை தண்ணீர் தினமும் தேவைப்படும் என்று  சிந்தித்திருக்கிறீர்களா? நாம் தினசரி 3 லிட்டர் தண்ணிராவது அருந்தினாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் சில தாவரங்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும்.மனிதர்களுக்கும் கனிகளை காய்களை உருவாக்கும் தாவரங்களுக்கும் நீர் அத்யாவசியமானது. நீரின்றி பல காலம் இருப்பதென்பது அசாத்தியம்.

ஆனால் சில குறிப்பிட்ட தாவரங்கள்  மிகக்குறைந்த நீரிலேயே வாழும் தகவமைப்பைக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக சில கள்ளி வகைகள் பலமாதங்களுக்கு மழையின்றியும் உயிர்வாழும்.உலகெங்கிலும் உல்ள பல பாலைவனக்களில் இத்தகைய கள்ளிகள்  நிறைந்து காணப்படுகின்றன.

கள்ளிஎன்பதுஎன்ன?

Saguaro cactus

சாகுவாரோ கள்ளிகளானது  நீண்ட, வறண்ட, வெப்பமான கோடை காலங்களில் உயிர்வாழா சிறப்பானதகவமைப்புக்களை கொண்டிருக்கும். படம் மிவாசடோஷி.

கள்ளி அல்லது கள்ளிகள் எனப்படுபவை சதைப்பற்றான, நீரை சேமித்து வைக்கும் உட்பகுதியைக்கொண்டிருக்கும் தாவ்ரங்கள். இவை மிகவும் தடிமனான மேற்தோலையும், மெழுகுப்பூச்சையும் கொண்டிருக்கும். மேற்தோலின் முதல் வரிசை ஆங்கிலத்தில் epidermis  எனபப்டும். Epi  என்றால் மேற்புறம்  dermis என்றால் தோல்.

கள்ளித்தாவரங்களுக்கு பிறதாவரங்களைப்போல் இலைகலிருக்காது மாறாக, சதைப்பற்றுடன் விளிம்புகளில் முட்களுடன் கூடிய இலைகளே காணப்படும் .இந்த முட்கள் கள்ளிச்செடியை ,உண்ண வரும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றூம்.. Epidermis அடுக்கு ஒளிசேர்க்கை செய்வதால் கள்ளிச்செடிகள் முழுவதும் பச்சை நிறத்தில் காணப்படும்

நீரின்றிவாழ்தல்

பாலையில் எப்போதாவது மழை பொழிகையில் கள்ளிகள் விரைவாக அதிகளவில் நீரை வேர்கள் வழியே  உறிஞ்சி எடுத்து உள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுத்யில் சேமித்து வைத்துக்கொள்ளும். (Saguaro)  சாகுவாரோ என்னும் கள்ளி வகை 2,000 பவுண்டுகள் அதாவது 907 லிட்டர் நீரை தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும்.இந்த சேமிப்புநீரைக்கொண்டே கள்ளிகள் அடுத்துவரும் கோடையை தாக்குப்பிடிகும்

மேலும் கள்ளிகள் பல மாதங்கள் நீரின்றி இருப்பதன் காரணம் ஒளிச்சேர்கைக்கு அவை மிக மிக குறைந்த நீரையே எடுத்துக்கொள்கின்றன. இலைத்துவாரங்களை திறக்கையிலேயே அதிக அளவு நீரை  தாவரங்கள்  இழக்கின்றன. ஆனால் கள்ளிச்செடிகள் பாலைகளில் குளிர்ந்திருக்கும் இரவில் மட்டுமே இலைதுவரங்களை திறப்பதால்  இவற்றிலிருந்து ஆவியாகும் நீரின் அளவும் மிகக்குறைவாகவே இருக்கும்

இலை உடற்கூறியல்
பெரும்பாலான கரியமில வாயு ஸ்டோமாட்டா வழியாக தாவரங்களுக்குள் நுழைகிறது, ஸ்டொமேட்டா துளைகள் தாவரங்களின் உடலின் மேற்பரப்பிலிருக்கும் சிறிய செல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஸ்டோமாட்டா தாவரங்களின் இலைகளில் காணப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இரவில்சுவாசித்தல்

கள்ளிகளுக்கு தேவையான கரியமில  வாயு இரவில் மட்டும்தான் கிடைக்கிறதென்றாலும் ,ஒளிச்சேர்க்கைக்கு  சூரியஒளி தேவைப்படுகின்றது.இரவில் கிடைக்கும் கரியமில வாயுவை கள்ளிகள் தங்களின் செல்களில் மேலிக் அமிலமாக சேமித்துவைக்கின்றது

Light and dark reactions Tamil photosynthesis
CAM தாவரங்களில், ஸ்டோமாட்டா திறக்கும்போது, இரவில் மட்டுமே கரியமில வாயு சேகரிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்க.

பகலில், மாலிக் அமிலம் மீண்டும் கரியமில வாயுவாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளி பிரகாசிக்கையில், ஒளி வினைகள் கால்வின் சுழற்சிக்கான சக்தியை உருவாக்கி கரியமில வாயுவை சர்க்கரைகளாக மாற்றும். கரியமில வாயுவை இரவில் அமிலமாக சேமித்து வைப்பதால் இந்த வகை ஒளிச்சேர்க்கை கிராசுலேசியன் ஆசிட் வளர்சிதை மாற்றம் என அழைக்கப்படுகிறது.

உயிரியலாளர்கள் தாவரங்களில் ஒளிச்சேர்க்கையை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், கள்ளிகளை விட அதிகமான தாவரங்கள் CAM ஐப் பயன்படுத்துகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, சில தாவரங்கள் CAM ஐ தேவையான போது உயிர்ப்பித்தும் தேவையில்லாத போது அணைத்தும் வைக்கின்றன. ஒரு சில நீர்வாழ் தாவரங்கள் கூட CAM ஒளிச்சேர்க்கையை பயன்படுத்துகின்றன. உலகெங்கிலும் காணப்படும் CAM தாவரங்கள் மற்றும் நீர் அல்லது கார்பன் டை ஆக்சைடு குறைவாக இருக்கும்போது தேவையான தகவமைக்கொண்டிருக்கின்றன.


புகைப்படங்கள்; Wikimedia Commons. பனிச்செடி புகைப்படம் உதவி; Frank Vincentz. இலை குறுக்கு வெட்டுத்தோற்றம் மற்றூம் ஒளி/ இருள் சுழற்சி; Sabine Deviche.

மேலும் அறிந்து கொள்ள: ஒளியை உண்ணுதல்
ஆசிரியரின் பெயரில் திருத்தங்கள் செய்யவேண்டி வரலாம்
https://askabiologist.asu.edu/tamil/CAM-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

நூலியல் தகவல்கள்:

  • கட்டுரை: CAM தாவரங்கள்
  • ஆசிரியர்: Dr. Biology
  • பதிப்பகத்தார்: Arizona State University School of Life Sciences Ask A Biologist
  • தளத்தின் பெயர்: ASU - Ask A Biologist
  • வெளியிடப்பட்ட தேதி: 19 Mar, 2021
  • அணுகிய தேதி:
  • இணைப்பு: https://askabiologist.asu.edu/tamil/CAM-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

APA Style

Dr. Biology. (Fri, 03/19/2021 - 15:27). CAM தாவரங்கள். ASU - Ask A Biologist. Retrieved from https://askabiologist.asu.edu/tamil/CAM-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

American Psychological Association. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/560/10/

Chicago Manual of Style

Dr. Biology. "CAM தாவரங்கள்". ASU - Ask A Biologist. 19 Mar 2021. https://askabiologist.asu.edu/tamil/CAM-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

MLA 2017 Style

Dr. Biology. "CAM தாவரங்கள்". ASU - Ask A Biologist. 19 Mar 2021. ASU - Ask A Biologist, Web. https://askabiologist.asu.edu/tamil/CAM-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Modern Language Association, 7th Ed. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/747/08/
கிராசுலேசியன் அமில வளர்சிதை மாற்றம்

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

Share