Looking for the legacy site? Click here
நோயெதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் ஒரு மருந்து அல்லது ஒரு சத்துப்பொருள்.
இம்யூனோஸ்டிமுலண்ட் (Immunostimulant): நோயெதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் ஒரு மருந்து அல்லது ஒரு சத்துப்பொருள்.
நோய்க்காரணிப்புரதம் அல்லது இறந்த அல்லது பலவீனப்படுத்தப்பட்ட வைரஸ் அல்லது பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தி நோயெதிர்ப்புத்திறனின் நினைவை மேம்படுத்தும் ஒரு பொருள்.
தடுpபு மருந்து (Vaccine): நோய்க்காரணிப்புரதம் அல்லது இறந்த அல்லது பலவீனப்படுத்தப்பட்ட வைரஸ் அல்லது பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தி நோயெதிர்ப்புத்திறனின் நினைவை மேம்படுத்தும் ஒரு பொருள்.
பாக்டீரியாவை அழிக்கும் அல்லது பலவீனப்படுத்தும் ஒரு பொருள்.
நுண்ணுயிர் எதிர்ப்பி/கொல்லி (Antibiotic): பாக்டீரியாவை அழிக்கும் அல்லது பலவீனப்படுத்தும் ஒரு பொருள்.
நுண்ணுயிர்க்கொல்லியால் அழிக்க அல்லது சேதமடைய செய்ய முடியாத ஒரு பாக்டீரியா குழு.
நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் (Antibiotic resistant): நுண்ணுயிர்க்கொல்லியால் அழிக்க அல்லது சேதமடைய செய்ய முடியாத ஒரு பாக்டீரியா குழு.
ஒரே இனத்தை சேர்ந்த, பிற குழுக்களிலிருந்து வேறுபடும் மற்றொரு குழுவை சேர்ந்த உயிரினங்கள்.
வகை (Strain): ஒரே இனத்தை சேர்ந்த, பிற குழுக்களிலிருந்து வேறுபடும் மற்றொரு குழுவை சேர்ந்த உயிரினங்கள்.

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்புதிறனுடன் போராடுதல்

50 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிக அளவிலான நுண்ணுயிர்க்கொல்லிகள் இருக்கின்றன என்றாலும், நுண்ணுயிர்க்கொல்லிகளால் பாதிப்படையாத பல பல புதியவகை பாக்டீரியாக்களும் இப்போது உள்ளன.  தொடர்ந்து நாம் புதிய மருந்துகளை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம், மேலும் அப்புதிய பாக்டீரியாக்களால் எதிர்க்க முடியாத புதிய மருந்துகளை நோயுற்றவர்களுக்கு அளித்து பாக்டீரியாக்களின் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறனை தடுக்கவும் முயன்று கொண்டிருக்கிறோம்

நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையிலான பரிணாமப் போரில் நமக்கும் ஒரு வாய்பு கிடைக்கவேண்டுமென்றால் நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்

CDC ஆண்டிபயாடிக் பரிந்துரைகள்
நுண்ணுயிர்க்கொல்லிகள் வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன ஆனால் அவற்றை பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு சொடுக்குக.

1. நுண்ணுயிர்க்கொல்லிகளை புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்தவேண்டும்.தற்போது நுண்ணுயிர்க்கொல்லிகள் மருத்துவர்களால் மட்டும் பரிந்துரைக்கப்படுவடுவதில்லை. கால்நடைகளுக்கு  வளர்ச்சியை அதிகப்படுத்த அல்லது நோய் தடுப்பாகவும் நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிக்கப்படுகின்றன. (பசுக்கள் பன்றிகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றைப்போல). இதுபோல உணவு வழியே அளிக்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளை நேரடியாக பாக்டீரியாக்களின் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறனுடன் தொடர்பு படுத்த முடியாதெனினும் இது நிச்சயமாக மனிதர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும் .கழிவுகளில் இருக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகள்  பிற பாக்டீரியாக்களில் எதிர்ப்புத்திறனை உருவாக்கும்  வழிகளை தேர்ந்தெடுக்கும் என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுகொண்டிருக்கிறார்கள். 

மனித உடலில், கால்நடைகளில், நமது சாக்கடைகளில் மற்றூம் நீர்த்தேக்கங்கள் போன்ற நாம் நுண்ணுயிர்க்கொல்லிகளை பயன்படுத்தும் பல்வேறு சூழல்களில் பாக்டீரியாவின் பரிணாம வளர்ச்சியில் நுண்ணுயிரி எதிர்ப்பிகளின் விளைவுகளை நாம் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இவற்றை முழுமையாக புரிந்துகொள்ளும் வரையிலும் நுண்ணுயிர்க்கொல்லிகளின் பயன்பாட்டினை  எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ள வேண்டும். நுண்ணுயிர்கொல்லிகளை கவனமாக பயன்படுத்துவதின் ஒரு பகுதியாக நம் உடலில் ஏற்படும் சிராய்ப்புகள் காயங்களை கண்காணித்து அவற்றில் நோய்தொற்று ஏற்படாமல் கவனமாக இருக்கவேண்டும், மேலும் நாம் உண்ணும் உணவிலும் கவனமாக இருக்கவேண்டும்.  அவ்வாறு இருக்கையில் நம் வாழ்நாள் முழுவதுமே நுண்ணுயிர்க்கொல்லிகளை சார்ந்திருப்பதை நாம் நிச்சயமாக குறைக்கமுடியும். 

2. புதிய நுண்ணுயிர்க்கொல்லிகளை உருவாக்கவும் பழைய நுண்ணுயிர்க்கொல்லிகளை பயனபடுத்துவதிலும் ஆய்வுகளை நாம் அதிகரிக்கவேண்டும். மருந்துகளின் உருவாக்கம் பொதுவாக மெதுவாக நடைபெறுகிறது. மேலும் நுண்ணூயிர்க்கொல்லிகள் சிலசமயங்களில்  ஒரு குறிப்பிட்ட வகையான பாக்டீரியாக்களுக்கு எதிராகவே உருவாக்கப்படுகிறது இவை பிற பாக்டீரியாக்களில் எப்படி செயலபுரிகிறது என்பது சோதிக்கப்படுவதில்லை. இந்த மருந்துகளை எவ்வாறு பயன்படுத்தலாலம் என்று நாம் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாம் ஒரு சில குறிப்பிட்ட நுண்ணுயிர்க்கொல்லிகளையே அதிகம் சார்ந்திருந்தோம். (உதாரணமாக பெனிசிலின்) நமக்கு விரிவான அளவில் பல விதங்களில் செயல்புரியும் நுண்ணுயிர்க்கொல்லிகள் இருக்குமேயானால் குறிப்பிட்ட சில நுண்ணுயிர்க்கொல்லிகளை மட்டும் சார்ந்திருப்பதை நாம் குறைத்துக்கொள்லலாம். இது பாக்டீரியாக்களுக்கு எதிரான போரில் நமக்கு மருத்துவரீதியாக அதிக ஆயுதங்களை அளித்து  நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு பெரிய அளவிலான பிரச்சனையாக மாறும் வாய்ப்புக்களையும் குறைக்கும்.

Typhoid vaccine

தடுப்பு மருந்துகள் பாக்டீரியாவின் தொற்றுக்களை முன்கூட்டியே தடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ளன. சால்மொனெல்லா பாக்டீரியாவினால் உண்டாகும்  டைஃபாய்ட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து இவ்வகையை சேர்ந்ததுதான். சித்திரம்; Kristoferb.

3. நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு பதிலிகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளையும் நாம் அதிகரிக்க வேண்டும். நுண்ணுயிர்க்கொல்லிகள் மட்டுமே பாக்டீரியாவுக்கெதிராக போரிட நமக்கிருக்கும் ஒரெ வழியல்ல.ஆனா அவை பாக்டீரிய பரிணாம வளர்ச்சியில் பெரும் விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றன.அதாவது பாக்டீரியாக்களில் நுண்ணுயிர்க்கொல்லிகள் எதிர்ப்புதிறனை உருவாக்குவது பிற  தடுப்பு மருந்துகள் மற்றும் நோயெதிர்ப்பு ஊக்கிகளைக்காட்டிலும் விரைவாக உண்டாக்குகிறது. தடுப்பு மருந்துகளை உருவாக்குவது அல்லது நோய்தொற்றுகளுக்கெதிராக உடலின் நோயெதிர்ப்பை அதிகரிப்பது ஆகிவற்றை நம்மால் செய்யமுடிந்தால் நுண்ணுயிர்க்கொல்லிகளை சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ள முடியும்.

நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறனின் இந்த பிரச்சனையை  அணுகும் இந்த அனைத்து வழிமுறைகளிலும் மிக முக்கியமானது நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பை சரியாக புரிந்துகொண்டு அதை பரப்புவதே ஆகும். நமது சொந்த வாழ்க்கையில் நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகப்படிடையான பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது என்பதை குறித்து நாம் கற்றிருப்பதை உறுதி செய்து இந்த விஷயத்துக்கு என்ன செய்யலாம் என்பதை முடிவுசெய்யலாம். 

பாக்டீரியாக்களுக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கும் இடையேயான இந்த பரிணாமப் போரை  பல புதிய வழிமுறைகளைக் கொண்டு தொடர்ந்து நடத்த நமக்கு பாக்டீரியா மற்றும் நோயெதிர்ப்பில் ஆர்வமுள்ள  விஞ்ஞானிகள் அதிக அளவில்  இருப்பதும் மிக முக்கியம்.

 

ஆசிரியரின் பெயரில் திருத்தங்கள் செய்யவேண்டி வரலாம்
https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

நூலியல் தகவல்கள்:

  • கட்டுரை: நுண்ணுயிரி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான போர்
  • ஆசிரியர்: Dr. Biology
  • பதிப்பகத்தார்: Arizona State University School of Life Sciences Ask A Biologist
  • தளத்தின் பெயர்: ASU - Ask A Biologist
  • வெளியிடப்பட்ட தேதி: 21 Jun, 2022
  • அணுகிய தேதி:
  • இணைப்பு: https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

APA Style

Dr. Biology. (Tue, 06/21/2022 - 10:52). நுண்ணுயிரி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான போர். ASU - Ask A Biologist. Retrieved from https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

American Psychological Association. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/560/10/

Chicago Manual of Style

Dr. Biology. "நுண்ணுயிரி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான போர்". ASU - Ask A Biologist. 21 Jun 2022. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

MLA 2017 Style

Dr. Biology. "நுண்ணுயிரி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான போர்". ASU - Ask A Biologist. 21 Jun 2022. ASU - Ask A Biologist, Web. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Modern Language Association, 7th Ed. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/747/08/